1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. what happened in london for one week

இன்று சென்னை திரும்பும் விஜய்!.. ஒரு வாரத்தில் என்னதான் நடந்தது?.. ஒரு அலசல்!..

vijay
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதற்காக கடந்த 10ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். எனவே, லண்டனில் அவர் பல தொழிலபதிர்களையும் சந்திக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விஜயோ லண்டன் சென்றதும் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடிகர் அஜித்தின் டீம் கலந்துகொண்ட கார் ரேஸ் போட்டியை துவங்கி வைக்க சென்றார். ஒருபக்கம் ஏற்கனவே லண்டனில் இருந்த திரிஷா அந்த போட்டியை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வந்தார். அதோடு, அவர் விஜயின் அருகில் நிற்கும் வீடியோவும் வெளியானது.

ஒருபக்கம், விஜயும், அஜித்தும் நட்பு பாராட்டிக்கொண்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அஜித்தின் கார் ரேஸ் தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கிளாடியேட்டர்ஸ் என்கிற ஆவண படத்திற்கு விஜயின் மூலம் புரமோஷன் கிடைத்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. அஜித்தின் ரேஸ் கார் மீது அமர்ந்து விஜய் போஸ் கொடுத்தார். ரேஸ் காரை விஜய் ஓட்டியும் பார்த்தார். அனேகமாக Gladiators ஆவண படத்தில் விஜயும் இடம் பெற்றிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith vijay

ஒருபக்கம், லண்டனில் விஜய் தங்கியிருந்த Shangri-La The Shard ஹோட்டல் முன்பு அவரை பார்க்க ரசிகர்கள் தினமும் குவிந்தனர். அவர்களில் சிலரை மட்டுமே விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சில புகைப்படங்களும் வெளியானது.

அதேபோல், 5 நிறுவனங்களுடன் சுமார் 17,800 கோடி அளவுக்கு முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றில் சில நிறுவனங்கள் ஏற்கனவே தமிழத்தில் முதலீடு செய்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

விஜய் நிறைய முதலீட்டார்களை பார்த்தது போல புகைப்படங்கள் வெளியாகவில்லை. எவ்வளவு முதலீடுகள் கொண்டுவரப்பட்டது என தவெக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன.

தவெக சார்பில் இதை செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!...
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
லண்டனில் முதல்வர் விஜயின் நிகழ்ச்சி ரத்து!.. என்ன காரணம்?..