வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (17:12 IST)

கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?

மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகள் வானொலி மையம் இயக்கி வருகின்றனர்.


 
மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள அக்மத்நகர் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் வானொலி மையம் நடத்துக்கின்றனர். இந்த வானொலி மையத்தில் குற்றவாளிகளை ஓழுங்குப்படுத்தும் நோக்கில் பாடல்கள் மற்றும் பக்தி உபதேசங்கள் ஒளிப்பரப்படுகிறது.
 
சிறையிலிருக்கும் கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் ஒலிப்பெட்டி பொருத்தப்பட்டுள்ளதால் அனைவரும் பாடல் கேட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த வானொலி மையத்தில் பாடல்கள் மட்டுமல்லாமல் சுகாதர விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகளும் ஒலிப்பரப்படுகிறது.
 
மேலும், சிறை அதிகாரிகள் கைதிகளை கண்ணியத்துடன் வாழ கற்றுக்கொடுக்க இது போன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.