செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (17:43 IST)

நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை அறிக்கையை வெளியிட தடை விதித்த உயர்நீதிமன்றம்

நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
 
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி, அந்த கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்த சந்தானம் குழு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, வரும் மே 15ல் விசாரணை அறிக்கையை சமர்பிக்கவுள்ள நிலையில், இந்த அறிக்கையை வெளியிட கூடாது என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்தானம் குழுவை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.