வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (13:50 IST)

தமிழில் தமன்னா, தெலுங்கில் ராஷிகண்ணா.. ‘அரண்மனை 4’ போட்டியில் வெல்வது யார்?

Sowmiya Anbumani
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் தமிழகத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்றால் அதில் ஒன்று தர்மபுரி என்பதும் இங்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா போட்டியிடுகிறார் என்பது தெரிந்தது.

இந்த தொகுதியில் திமுக மற்றும் பாமக இடையே வாக்கு சதவீதம் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருப்பதாகவும் இருவரும் பலமாக போட்டி போடுகின்றனர் என்றும் யார் வெற்றி பெற்றாலும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலைமைப்படி அங்கு சௌமியா அன்புமணி கை ஓங்கி இருப்பதாகவும் ஒரு வேலை கடைசி நேரத்தில் பணம் தண்ணீராக செலவு செய்தால் நிலைமை மாறலாம் என்று ஆனால் அதே நேரத்தில் பெரிய அளவில் வாக்கு சதவீதத்தில் எந்த கட்சி வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.

சௌமியா அன்புமணிக்கு உள்ள ஒரே மைனஸ் அதிமுகவும் பாமகவும் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுவது தான் என்றும் ஆனால் அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக சௌமியா அன்புமணிக்கு கிடைக்கும் என்பதால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தொகுதியில் திமுக சார்பில் மணி என்பவர் போட்டியிடுகிறார் என்பதும் அவரை வெற்றி பெறச் செய்ய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தீவிரமாக பணி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது

Edited by Siva