வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சிவகாசி , புதன், 17 ஏப்ரல் 2024 (08:24 IST)

பட்டாசு தொழிலாளர்களிடம் நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பு!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற  வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக  சரத்குமார் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல்19ம் தேதி நடைபெறவுள்ளது.
 
இதனையடுத்து நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுடைய நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இதனைதொடர்ந்து பாஜக வேட்பாளர் ராதிகா- வுக்கு  ஆதரவாக அவரது கணவர் சரத்குமார்   விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற  வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக  தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.