1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. southern railway says about ooty special train

மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Ooty Train
மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும், விடுமுறை தினங்களிலும்  சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த சிறப்பு ரயில் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செப்டம்பர் 16, 17, 30, மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. 
 
அதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செப்டம்பர் 17, 18, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செப்டம்பர் 16, 30, அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!