வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (17:52 IST)

நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை.. சென்னை மெட்ரோ அறிவிப்பு!

நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
சாதாரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் நான்கு மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் நடைபெற உள்ளது. 
 
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அதிகாலை 3 40 மணி முதல் சென்னை சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளை 3.40 மணிக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில் சைதாப்பேட்டை, லிட்டில் மவுண்ட், கிண்டி, விமான நிலையம், விம்கோ நகர்  சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
கலைஞர் மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் இந்த மெட்ரோ ரயிலில் பயணித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran