தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..
- டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...
- டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?
- பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..
- விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!
மக்கள் முடிவை தப்புன்னு சொல்ல நீங்க யார்?!.. சிவக்குமார் கேள்வி!...
நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து சினிமா துறையிலிருந்து மேலும் ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். விஜய் முதல்வராக பதவியேற்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், தவெக ஆட்சியை திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
விஜய் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. நேற்று டெல்லி சென்ற விஜய் அங்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து விட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ஒரு விழா ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் காமராஜர் பல வருடங்கள் சிறையில் இருந்தார். சில வருடங்கள் முதலமைச்சராக இருந்தார். 50,60களில் சுதந்திர போராட்ட வீரர்களை தலைவர்களாக மக்கள் பார்த்தார்கள்.. ஆனால், ஒருகட்டத்தில் அது மாறிவிட்டது. சினிமாவிலிருந்து முதலமைச்சர்கள் வர துவங்கினார்கள்.
காமராஜர் இறந்தபோது அவரின் தலையனையின் கீழ் 148 ரூபாய் பணம் இருந்தது. அதுதான் அவரின் சொத்து. ஆனால் அப்படிப்பட்ட காமராஜரையே வேண்டாம் என முடிவெடுத்து மக்கள் அறிஞர் அண்ணாவுக்கு வாக்களித்தார்கள். இப்போது, அதிமுக, திமுக வேண்டாம் என முடிவெடுத்து மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அதை தவறு என நாம் எப்படி சொல்ல முடியும்?.. விஜய் நல்லது செய்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் கூறினார்..
மேலும், மக்களிடம் அறியாமை இருக்கும் வரைக்கும் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் பிழைத்துக் கொள்வார்கள். அறியாமை இருப்பதால்தான் மக்கள் சினிமா பார்க்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.