தொடர்புடைய செய்திகள்
- நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..
- பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..
- விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!
- வெளிநாட்டு போலீஸ் போல் சிங்கப்பெண் படைக்கு யூனிபார்ம்.. இதை பார்த்தாலே தப்பு செய்றவன் நடுங்கனும்...!
- விஜய் ஆட்சி தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 4,950 கோடி ரூபாய் முதலீடு.. ஜேகே டயர் நிறுவனம் அறிவிப்பு..!
டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?
தமிழக முதல்வர் விஜய் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்தின் முக்கிய தேவைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துத் தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் அவர் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டெல்லி பயணத்தின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான முறையான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் சோமநாதன், ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ் லக்கானி, பிரியதர்ஷினி மற்றும் ரோஹினி உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நிர்வாக ரீதியான அவசர பணிகளின் காரணமாகவே முதல்வர் விஜய் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான உறவை பேணி, மாநிலத்தின் நலனுக்காகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் முனைப்பில் விஜய் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சோனியா-ராகுல் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மத்திய அரசுடன் அவர் மேற்கொண்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தமிழகத்தின் அரசியல் மற்றும் நிர்வாகக் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
Edited by Siva
