1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sivagangai akash confession giving shock

என் காலை போலீசார் உடைத்தனர்!.. அதிர்ச்சியை கொடுத்த ஆகாஷின் மரண வாக்குமூலம்..

akash
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டியதாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆகாஷின் குடும்பத்தினரும், உறவினர்களும் போலீசார் தாக்கியதில்தான் ஆகாஷ் உயிரிழந்தார்.. அவரின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. ஆகாசஷ் காவல் மரனம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் ஆகாஷை போலீஸ் காவலில் எடுப்பதற்கு முன் அவர் கொடுத்த வாக்குமூலத்தை நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கிறது.. அந்த வாக்குமூலத்தில் ‘சீருடை அணியாத 10 காவல்துறை அதிகாரிகள் வெள்ளைத்துணியால் என் கண்களைக் கட்டி என்னை மட்டும் வேறு ஒரு காரில் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்கள்..

ஓரிடத்தில் என்னை அமரவைத்து எனது கெண்டைக்காலுக்கு கீழேயும் முட்டிக்கு கீழேயும் இரண்டு கற்களை வைத்து ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியில் எனது வலது காலில் ஓங்கி அடித்தார்கள்.. அடித்தவுடன் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் வந்தது.. நான் வலியால் துடித்தேன்.. கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்னை அடித்த போலீஸ் அதிகாரிகளை என்னால் பார்க்க முடியவில்லை..

அதன் பின் கண் கட்டை அவிழ்த்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் பாலத்திலிருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு மிரட்டினார்கள்’ என கூறியிருக்கிறார். ஆகாஷின் வாக்குமூலம் அவரின் குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜயின் எஸ்கேப் ரகசியம் என்ன!.. நடிகை வினோதினி கோபம்!..