1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anbumani said dmk is behind for pmk into two

நல்லாருந்த குடும்பத்த பிரிச்சதே திமுகதான்!. அன்புமணி ராமதாஸ் பகீர்!..

stalin anbumani
பாமக கட்சியை தொடங்கியவர் மருத்துவர் ராமதாஸ். அவருக்கு பின் அவரின் மகன் அன்புமணி பாமகவில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். பாமகவில் இளைஞர் அணி செயலாளராக அன்புமணி மாறினார்.. பாமகவை பொறுத்தவரை திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி அமைத்து வந்தார்கள்.. மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தார் ராமதாஸ்..

ஆனால், கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். ஒருபக்கம் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான பல புகார்களை கூறினார்.. அவனை நான் பெற்றதே தவறு.. மத்திய அமைச்சராகிய து பெரிய தவறு. தாயை அடிக்க வந்தான்.. எனக்கு துரோகம் செய்துவிட்டான் என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார் ராமதாஸ்.. இப்போது அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என பாமக இரண்டு பிரிவாக பிரிந்து விட்டது.. அதோடு சட்டப்படி அன்புமணிதான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

அதேபோல், அன்புமணி பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், இன்று பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி ‘ கடந்த சில மாதங்களாகவே பல பிரச்சனை.. எங்கள் குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கியது திமுகதான்.. அதனால்தான் திமுக தோற்கவேண்டும் என நினைக்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இந்த கட்சி செய்யவில்லை’ என்று அவர் பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
என்.டி.ஏ கூட்டணிக்கு போறது தற்கொலைக்கு சமம்!.. விஜயை தடுக்கும் ஜான் ஆரோக்யசாமி..