போராட்டம் செய்ய தயாராகிறார் தனுஷ்.. சினிமா உலகில் இருந்து இன்னொரு முதல்வரா?
நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருவதுடன், அவர்களுக்கு பரிசுகள் வழங்குவது மற்றும் தினமும் உணவு அளிப்பது போன்ற சமூக நல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
பிறந்தநாளில் ஆட்டோ வழங்குவது போன்ற உதவிகள் மூலமாக அவர் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றன. அவரது இந்த நகர்வுகள் ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், தனுஷ் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தமிழகத்தின் உரிமை சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கவும், அறிக்கைகள் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் ஏதேனும் பெரிய மக்கள் பிரச்சினைகள் வெடிக்கும் பட்சத்தில், நேரடி போராட்ட களத்தில் இறங்கி போராடவும் அவர் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. விஜய்க்கு பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து மற்றுமொரு பிரபல நடிகர் தீவிர அரசியலில் களமிறங்கத்தயாராகி வருவது தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
