1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji net petitions in court

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

senthil balaji
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்பதும் சட்டவிரோத பண பரிமாற்றக் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்னும் இந்த வழக்கு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து அடுத்தடுத்து ஜாமீன் மனுக்கள் மட்டுமின்றி இந்த வழக்கு குறித்த புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் தான் வழக்கு தாமதமாகிறது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் மூன்று புதிய மனுக்களை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!