1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hemanth soren get bail from court

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

hemanth arrest
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்த நில மோசடி வழக்கில் அப்போது முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக விசாரணை நடந்த நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

மேலும் ஹேமந்த் சோரன் இந்த வழக்கில் குற்றவாளி இல்லை என்றும் அவர் ஜாமீனில் இருக்கும் போது குற்றம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் உத்தரவாதம் தந்ததை அடுத்த இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

 இதனை அடுத்து ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் இன்னும் சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!