1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan says vijay can only change the dmk

தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்!.. செங்கோட்டையன் ராக்ஸ்!...

sengottaiyan
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எம்.எல்.ஏ, அமைச்சர் என வலம் வந்தவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலமான கோபிசெட்டிபாளையத்தில் 8 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

அரசியலில் 50 வருட அனுபவம் பெற்றவர் செங்கோட்டையன்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் கொடுக்க துவங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து வெளியே அனுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி.

இதையடுத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் செங்கோட்டையன்.. அதோடு ஈரோட்டில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தையும் சிறப்பாக நடத்திக் காட்டினார்.. ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி ஒருவர் தவெகவுக்கு  சென்றிருப்பது அந்த கட்சிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது

இந்நிலையில்தான், மற்று கட்சியினர் இணைந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘தவெக தலைவர் விஜய் கைகாட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர்.. திமுக ஆட்சியை மாற்ற விஜயால் மட்டுமே முடியும்.. தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்தான்’என பேசியிருக்கிறார்.

அதே மேடையில் பேசிய அல்லு அர்ஜுனா ‘தவெக பொதுக்கூட்டங்களுக்கு பணம் கொடுக்காமலேயே மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது திருவிழா போல மக்கள் கூட்டமாக வந்து தவெகவுக்கு வாக்களிப்பார்கள்’ என்று பேசினார்.
அடுத்த கட்டுரையில்
சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...