1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 24 ஜனவரி 2026 (10:52 IST)

மோடி சொன்ன CMC-க்கு அர்த்தம் இதுதான்!... அன்பில் மகேஷ் பதிலடி!....

anbil
இந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பொதுக்கூட்டம் சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மேடையில் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்.. தமிழ்நாட்டு மக்களே!.. நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தீர்கள்.. ஆனால் அவர்கள் மக்களின் நம்பிக்கையை குலைத்து விட்டார்கள்.. திமுக ஆட்சியை CMC ஆட்சி என அழைக்கலாம். அது Corruption, Mafia, Crime’ என்று குறிப்பிட்டார்.

மேலும் ‘திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிக்கிறது.. கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும்..  இங்கே ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது.. நீங்கள் திமுக ஆட்சியில் முன்னேற வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட வேண்டும்... தமிழக அரசு பெண்களை வசப்படுகிறது.. கலாச்சாரத்தை வசைப்படுகிறது’ என்றெல்லாம் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  ‘பிரதமர் சொன்ன டபுள் எஞ்சின் ஒரு டப்பா எஞ்சின்.. தமிழகத்தில் ஓடாது’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இந்நிலையி பிரதமரின் CMC கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 'எங்களை பொறுத்தவரை CMC என்பது Clarity in governance (ஆட்சியில் தெளிவு). Maintaining our dignity (கண்ணியத்தை பேணுதல்), Continuous Winning (தொடர் வெற்றி) என சொல்லியிருக்கிறார்.