1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops sekar babu meeting in tn assembly

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

ops
அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது சசிகலா இவரின் பதவியை பறித்தார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அதை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தர்ம யுத்தம் நடத்துவதாக தொடர்ந்து சொல்லி வந்தார்.. ஆனால் பாஜக மேலிடம்  ஓபிஎஸ்ஐ சமாதானப்படுத்தியதால் தர்மயுத்தத்தை கேன்சல் செய்துவிட்டு பழனிச்சாமியுடன் இணைந்தார். பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் ஒருங்கிணைந்து அதிமுக்வை நடத்தி வந்தனர்.

ஆனால், சில காரணங்களால் ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து வெளியே அனுப்பினார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் இப்போது வரை ஓபிஎஸ் தனியாக கட்சி துவங்கவில்லை.. அதேநேரம்  அவருக்கு ஆதரவாக அவருன் சென்ற  சில எம்எல்ஏக்கள் அதிமுக, திமுக, தவெக என கட்சி மாறிவிட்டனர். தற்போது ஓபிஎஸ் தனியாகவே இருக்கிறார்
.
எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தன்னை இணைத்து விடும் என்கிற நம்பிக்கையில் இருந்தார் ஓபிஎஸ்.. ஆனால் ஓபிஎஸ் மீண்டும் உள்ளே வரக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்க அது நடக்கவில்லை.
டிடிவி தினகரன் கூட இந்த கூட்டணியில் இணைந்து விட்டார்.. ஆனால் ஓபிஎஸ்க்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலியில்தான், சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் திமுக அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஓபிஸ் திமுகவுக்கு செல்லவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்!.. செங்கோட்டையன் ராக்ஸ்!...