நாங்களும் கூட்டணியில் இருக்கோம்!.. ஆனா உள்ளயே விடல!.. பாரிவேந்தர் சோகம்!...
2006 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து இந்திய தேசிய கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னைக்கு அடுட்துள்ள மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு பேசினார். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதே நேரம் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே அவர் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
இந்நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள பாரிவேந்தர் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பெருமையுடன் வந்தோம்.. ஆனால் தமிழக காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தும் மேடை ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் முன்பாகவே எங்களை காவல்துறை தடுத்து நிறுத்தி விட்டார்கள். காவலர்களின் தேவையில்லாத அடக்கு முறையால் நாங்கள் வெளியே நிறுத்தப்பட்டோம்.. நாங்களும் என்.டி.ஏ கூட்டணியில் ஒரு அங்கம்தான் என சொல்லியிருக்கிறார்.