1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan asking to wait tvk mlas with patience

ஃபீல் பண்ணாதீங்க!.. நல்ல சேதி வரும்!. தவெக நிர்வாகிகளுக்கு செங்கோட்டையன் ஆறுதல்..

sengottaiyan
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே நேரம் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களை அந்த கட்சி பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை..

இதை காரணமாக காட்டி தவெந்கவ்வை ஆட்சியமைக்க ஆளுநர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இரண்டு முறை நேரில் சென்று விஜய் கோரிக்கை வைத்தும் அது நடக்கவில்லை. ஒருபக்கம் விஜய் இன்று காலை 11:30 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவி ஏற்க திட்டமிட்டு அதற்கான வேலைகளும் நடந்தது. விஜயை முதல்வராக பார்க்க தவெக தொண்டர்களும், எம்.எல்.ஏக்களும் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஆனால் ஆளுநர் மறுத்துவிட்டதால் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். பனையூர் அலுவலகத்தின் முன்பு தவெக தொண்டர்களும், எம்எல்ஏக்களும் சோகத்துடன் காணப்படுகிறார்கள்..

இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது ‘இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்.. பொறுமை காக்க வேண்டும்.. எம்எல்ஏக்கள் சோர்ந்து போய்விடக்கூடாது’ என்று செங்கோட்டையன் அறிவுரை கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
கேரள காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா? தமிழ்நாட்டில் எப்போது?