1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police kept udhyanidih stalin in some other police staion

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

udhyanidhi stalin
முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசியதாக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து உதயநிதி கைது செய்யப்பட்டார்.

அதன்பின் போலீசார் அங்கிருந்து வாகனத்தின் மூலம் தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர். இது திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்த தமிழகத்தின் பல இடங்களிலும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஒருபக்கம் இது தொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் இன்று மாலைக்குள் காவல்நிலைய பிணையில் உதயநிதியை விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது..

இந்நிலையில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போலீசார் வாகனம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருப்பதால் உதயநிதியை போலீசார் திருச்சி கூட்டி செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. தஞ்சை காவல் நிலையத்தில் உதயநிதிக்கு பிணை கொடுப்பதாக சொல்லிவிட்டு தற்போது ஏன் திருச்சி செல்கிறார்கள்? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும்,வேண்டுமென்றே உதயநிதியை அலைக்கழிப்பதற்காக காவல்துறையினர் இப்படி செய்கிறார்கள் எனவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்தே போலீசார் உதயநிதியிடம் விசாரணை நடத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது. அனேகமாக, இங்கேயே உதயநிதிக்கு அவருக்கு பிணை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..