1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sellur raju attack vijay for his talk

நயன்தாரா வந்தா இன்னும் கூட்டம் வரும்!.. விஜயை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!..

vijay
நடிகர் விஜய் இப்போது தவெக தலைவராக மாறியிருக்கிறார். ரசிகர்களின் தளபதியாக இருந்தவர் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே விஜயின் குறிக்கோளாக இருக்கிறது. எனவே அதை நோக்கி அவரின் கட்சி காய்களை நகர்த்தி வருகிறது. அதேநேரம் இதுவரை தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தங்களுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று தவெக சொல்லி வருகிறது.

புதிதாக தோன்றியுள்ள ஒரு கட்சியுடணி அமைக்க மற்ற கட்சிகள் தயங்குகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஆனால் திமுகவின் எதிரியான அதிமுகவுடன் சேரவில்லை. திமுகவை அவர் தோற்கடிக்க விரும்பினால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள அமைச்சர்கள் கூட சொன்னர்கள். ஆனால் துணை முதல்வர் உள்ளிட்ட சில பதவிகள் கொடுப்பதாக சொல்லியும் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையவில்லை.

கூட்டணி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதிமுகவே ஒரு பெரிய கட்சியாகவே விஜய் மதிப்பதக தெரியவில்லை அதனால்தான் வருகிற தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தொடர்ந்து சொல்லி வருகிறார். இது அதிமுகவினருக்கு கோபப்படுத்தி இருக்கிறது.

இன்று செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ‘அதிமுக களத்திலேயே இல்லை என சொல்வது முட்டாள்தனம்.. அப்படி சொல்லி விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்?.. நாவடக்கம் தேவை.. நடிகருக்கு கூடுதலாக கூட்டம் கூடும். ஆனால் எல்லோராலும் எம்ஜிஆர் ஆக முடியாது.. நயன்தாராவுக்கு கூட கூட்டம் வரும்.. நயன்தாரா பிரச்சாரத்திற்கு வந்தால் எல்லோரும் வந்து பார்க்கத்தான் செய்வார்கள்.. எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்.. விஜய்க்கு  கொஞ்சம் அதிகமாக இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?