1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sarathkumar talk about tvk leader vijay

கூட்டம் கூடினா அரசியலா?.. விஜய்க்கு ஒன்னும் தெரியாது!.. மீண்டும் வம்பிழுக்கும் சரத்குமார்!..

sarathkumar
தமிழக அரசியலில் புது எண்ட்ரியாக மாறியிருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி களமாட துவங்கிவிட்டார். கட்சியை துவங்கிவிட்டு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்ததாலும், களத்தில் இறங்காமல் இருந்ததாலும் அவரை பார்ட் டைம் அரசியல்வாதி என பலரும் நக்கலடித்தார்கள்.

ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்தவுடன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார் விஜய். மதுரை, வியாழக்கிழமை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவொரு மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தையும் நடத்தினார். ஆனால், கரூருக்கு அவர் சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடியதில் 41 பேர் வரை உயிரிழந்தனர். 2026 சட்டமன்ற தேர்தலையும் விஜய் குறிவைத்திருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் செய்து வந்த சரத்குமார் ஒருகட்டத்தில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார்.  சமீபத்தில் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் திமுகவை தீயசக்தி என விமர்சித்தார். இதையடுத்து பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் ‘தமிழக வெற்றி கழகம்னு முழுச சொன்னா எனக்கு தெரியது. தவெக, இவெக என சொன்னாதான் தெரியும். திமுக தீய சக்தினு சொறாரு. முதல்ல அவருக்கே யார் நல்லவங்க.. யார் கெட்டவங்கன்னு தெரியாது. மத்த கட்சியை எதிர்த்து பேசுனாதான் அரசியல்னு நினைச்சிட்டு இருக்காரு. மத்திய அரசையும், மாநில அரசையும் பேசுனாதான் செய்தியா போடுவாங்கன்னு நினைக்கிறாரு. விஜய்க்கு பெரிய கூட்டம் கூடுவதால் அது பெரிய கட்சி இல்ல. பாஜகதன் உலகத்திலேயே பெரிய கட்சி’ என பேசியிருக்கிறார்.