1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Strained Ties: Is the DMK-Congress Alliance Heading for a Split Before 2026?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

congress
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வரும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் விட தொடங்கியுள்ளது. 
 
சமீபத்தில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் செய்ததை தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. 
 
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப்பங்கீடு மற்றும் ஆட்சிப்பகிர்வு தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி, இந்த கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
காங்கிரஸ் தொண்டர்களில் ஒரு தரப்பினர் திமுகவின் மேலாதிக்கத்தை குறைத்து, தவெக போன்ற புதிய சக்திகளுடன் கைகோர்க்கலாம் என விரும்புவது தலைமைக்கு நெருக்கடியை தந்துள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி உடைந்தால், அது அதிமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் லாபமாக அமையும். 
 
எதிர்க்கட்சி வாக்குகளும், சிறுபான்மையினர் வாக்குகளும் சிதறும்போது அது ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பி, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நயன்தாரா வந்தா இன்னும் கூட்டம் வரும்!.. விஜயை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!..