1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ctr nirmalkumar comment about seeman

சீமான் டைம் பாஸுக்காக கட்சி நடத்துகிறார்.. தவெக நக்கல்!...

seeman
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘நான் ஏன் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்?. நான் அண்ணன்.. விஜய் தம்பி. நான் 18 வருடங்களாக அரசியல் செய்து வருகிறேன். அவர்தான் என்னுடன் வர வேண்டும்.

எல்லா மேடைகளிலும் எனது வசனங்களை காப்பி அடித்து பேசுகிறார்.. அண்ணாவின் கட்சியை திமுக வைத்துக் கொண்டது.. எம்ஜிஆர் கட்சியை பழனிச்சாமி வைத்திருக்கிறார்.. புதிதாக கட்சி தொடங்கி ஒரு சதவீத வாக்கு வாங்க திராணி இருக்கிறது என்று நான் ஒரு மேடையில் பேசினேன். அதை தம்பி விஜய் அப்படியே காப்பி எடுத்து பேசுகிறார் விஜய் அதை அவர் செய்யக் கூடாது.

ஒருமுறை விஜய் ஆட்சி அமைத்துவிட்டு அதன் பின் ஆட்சியில் பங்கு என்று சொன்னால் அரசியல் கட்சிகள் நம்புவார்கள்.. ஆனால் ஒருமுறை கூட ஆட்சியில் இல்லாத போது அவர் சொல்வதை யார் நம்புவார்?.. என சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமான் பேசியதற்கு பதிலடி கொடுத்த தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ‘சீமான் 18 வருடங்களாக கட்சி நடத்துகிறார்.. ஆட்சி வேண்டாம்.. பதவி வேண்டாம்’ என்கிறார். அவர் எதற்காக கட்சி நடத்துகிறார் என்று தெரியவில்லை.. அவர் டைம் பாஸுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்’ என நக்கலடித்திருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மனைவியை அடிக்கலாம். ஆனா எலும்பு உடையக்கூடாது!.. புதிய சட்டம்...