விஜயை வச்சி பேரம் பேசிய காங்கிரஸ்!.. சீமான் நக்கல்!...
கடந்த பல தேர்தலாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸில் பலரும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக காங்கிரஸ் வியூக வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி மாணிக்கம் தாகூர் எம்பி போன்றவர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் காங்கிரஸ் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது..
இதனால் கோபமடைந்த திமுக தலைமை இதுவரை காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கான ஒரு குழுவை கூட அமைக்கவில்லை. அதே நேரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்றெல்லாம் இரு தரப்பினரும் சொல்லி வந்தார்கள்..
ஒருபக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தூக்கி பேச துவங்கியது காங்கிரஸ். ஏனெனில் எங்களிடம் வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறினார். இந்நிலையில்தான் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்வர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்..
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி சீமான் விஜயிடம் போய்விடுவோம் என சொல்லி சொல்லி அவரை வைத்து பேரம் பேசுகிறது காங்கிரஸ்.. ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கேட்டபோது எந்த கட்சி பங்கு தருகிறதோ அங்கு செல்லுங்கள் என முதலமைச்சர் சொல்லியிருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள் என நக்கலடித்திருக்கிறார்..