1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools and colleges today holiday

திருப்பத்தூர், குமரி மாவட்ட பள்ளிகளும் விடுமுறை!

பள்ளிகள்
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மழை வெள்ளம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை