புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:01 IST)

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு: மீண்டும் கனமழையா?

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு கரையை கடந்த நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை குறிந்துள்ளதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் திடீரென தற்போது அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 13 ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது
 
குறிப்பாக இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது