1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sarathkumar says he is the in 2026

2026ல் எங்கள் கட்சி வெற்றி பெறும்.. முதலமைச்சராக பதவியேற்பேன்: சமக தலைவர் சரத்குமார்..!

சரத்குமார்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்கு  இலக்கு அல்ல என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதலமைச்சராக ஆவேன் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.  

திருநெல்வேலியில் நடந்த  சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் எங்களை பற்றி அப்போது மற்ற கட்சிகளுக்கு தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்றும் நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பாராளுமன்ற தேர்தல் நமது இலக்கு இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் அங்கு வந்து உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்று தெரிவித்தார்.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வெள்ளத்தில் பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?.. தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!