1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (08:38 IST)

வெள்ளத்தில் பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?.. தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!

MK Stalin
புயல் மற்றும் வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை தொலைத்தவர்களுக்கு இலவசமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பினால் சேதம் அடைந்த கல்வி சான்றிதழ்கள் அரசு சான்றிதழ்கள் கல்லூரி சான்றிதழ்கள்  ஆகியவை கட்டணம் இன்றி  பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வருவாய் வட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதி அன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அதேபோல் சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் டிசம்பர் 12ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள்  விரைவில் அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva