வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆறாம் தேதி தொடங்கிய நிலையில் சற்றுமுன் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் பதிலடியாக நியூசிலாந்து அணியை 180 ரன்களுக்கு சுருட்டியது. இதனை அடுத்து 8 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருந்த வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் டெஸ்ட் தொடர் தற்போது சமனில் முடிவடைந்துள்ளது.
Edited by Mahendran