ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:45 IST)

டி 20 போட்டியில் கோலிக்கு மாற்று இவரா?… ஒட்டுமொத்தமாக அணியை விட்டு நீக்க பிசிசிஐ முடிவு!

சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ரோஹித் ஷர்மா கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. அதே போல மூத்த வீரர் கோலியும் அணிக்குள் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் இனிமேல் டி 20 கிரிக்கெட்டில் கோலியை இனிமேல் ஒரு வீரராக பிசிசிஐ கருதப் போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக இஷான் கிஷானை அந்த இடத்தில் விளையாட வைக்க முயற்சி செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரராக கோலிதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.