1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sarathkumar says about radhika

தாமதமாக நடிகை ராதிகா குற்றச்சாட்டு தெரிவித்தது ஏன்? சரத்குமார் விளக்கம்..!

சரத்குமார்
கேரவனில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தை தாமதமாக நடிகை ராதிகா சொன்னது ஏன் என்ற கேள்விக்கு அவருடைய கணவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் ஒரு படப்பிடிப்பின் போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசித்ததாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை நடிகர் சரத்குமார் சந்தித்தபோது ராதிகாவின் தாமதமான குற்றச்சாட்டு ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

என் மனைவிக்கு எந்த ஒரு பிரச்சனையையும் கடந்து போகக்கூடிய சக்தி இருந்ததால் அவர் அன்று சொல்லாமல் இருந்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்று தெரிந்தால் தான் தவறு செய்பவர்கள் திருந்த முடியும்.

இதுவரை எந்த நடிகையும் என்னிடம் இதுவரை புகார் கொடுத்ததில்லை, புகார் கொடுத்திருந்தால் கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்று கூறினார்.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்! - அதிர்ச்சி சம்பவம்!