வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:24 IST)

எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. மலையாள சினிமா குறித்து அவதூறு பரப்பாதீர்: மோகன்லால்

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்றும் மலையாள சினிமா குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் நடிகர் மோகன்லால் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா செய்த நிலையில் மோகன்லால் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 
 
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மோகன்லால் மலையாள திரை உலகில் 21 சங்கங்கள் இருக்கும் நிலையில் நடிகர் சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும் என்றும் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்குதான் இருக்கிறேன், பாலியல் புகார் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன். எனவே நடிகர் சங்கம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 
 வயநாடு போன்ற பேரிடர்கள் நிகழ்ந்த போது மக்களுக்கு மலையாள நடிகர் சங்கம் தான் உதவி செய்தது என்றும் நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை இருப்பதால் நான் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும் மோகன்லால் பதில் அளித்தார்.
 
Edited by Siva