வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (08:29 IST)

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்! - அதிர்ச்சி சம்பவம்!

Rebecca Chaptegi

உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனையை அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உகாண்டா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி (Rebecca Cheptegi). சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் விளையாட தகுதிப்பெற்ற இவர் மாரத்தான் பிரிவில் கலந்துக் கொண்டு ஓடி 44வது இடத்தை பிடித்தார்.

 

ஒலிம்பிக்ஸ் முடிந்து கென்யாவில் உள்ள தனது வீட்டில் ரெபேக்கா ஓய்வில் இருந்துள்ளார். அப்போது அவருக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது. இதில் டேனியல் ஆத்திரமடைந்து ரெபேக்கா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

 

இதனால் 75 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார் ரெபேக்கா. டேனியலுக்கும் சிறிய அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K