நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!.. பாடகர் தெருக்குரல் அறிவு கைது!..
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமூக நீதி மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய பாடல்களை எழுதி பாடியிருக்கிறார்.
நிறைய திரைப்படங்களிலும் இவர் பாடியிருக்கிறார். இவர் உருவாக்கிய தெருக்குரல் இசை தொகுப்பு இவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தது. எஞ்சாமி, நீ அரிச்சுவடி போன்ற பல சமூக அக்கறை கொண்ட பாடல்களை இவர் எழுதி பாடியிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலிக்கும் அறிவு சமத்துவத்தை வலியுறுத்தி பாடல்களை உருவாக்கி வருகிறார்..
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு எதிரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டு இன்று அவர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு எதிரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டு இன்று அவர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.