ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:25 IST)

கேரவன்களில் ரகசிய கேமரா..! நடிகை ராதிகாவிடம் கேரள அதிகாரிகள் விசாரணை.!!

கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்வதாக பரபரப்பு புகார் தெரிவித்திருந்த நடிகை  ராதிகாவிடம்  கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர்.   
 
கேரளத் திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிட்டியின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் சிக்கி உள்ளனர்.
 
இது தொடர்பாக பேசிய நடிகர் ராதிகா, கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்கின்றனர் என்றும் அதை செட்டில் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து மொபைலில் பார்த்து ரசிப்பதை நான் நேரடியாக பார்த்து உள்ளேன் என்றும் கூறியிருந்தார். 
 
இதனால் நான் பயந்து போய் ஹோட்டலில் அறை எடுத்து ஆடையை மாற்றி உள்ளேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து சக நடிகைகளுக்கும் எச்சரித்துள்ளேன் என்று கூறியிருந்தார். 

பல நேரங்களில் பாதுகாப்பு கோரி நடிகைகள் என் கதவை தட்டுவதுண்டு என்றும் அவர்களுக்கு நான் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன் என்றும் நடிகர் ராதிகா பேசியிருந்தது புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக விசாரித்து வரும், கேரளா சிறப்பு குழுவினர்,  நடிகை ராதிகாவிடம் தொலைபேசி வாயிலாக இன்று விசாரணை நடத்தினர். 


அப்போது கேரவன்களில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்தது தொடர்பாக  சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ராதிகாவிடம் கேட்டறிந்தனர்.  மேலும் எந்த நடிகைக்கு நடந்தது என அதிகாரிகள் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.