2 மாதங்களில் திருமணம்!.. ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி!..
கடந்த 3 வருடங்களாகவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா பலமுறை முயன்றும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 19ம் தேதி உக்ரைன் நாட்டின் ஓடேசா நகரில் இருந்து புறப்பட்ட எம்.வி கோல்டன் லியோ என்கிற சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அந்த கப்பலில் 17 மாலுமிகள் இருந்தனர். அவர்களின் 5 பேர் இந்தியர்கள்..
ரஷ்யா தாக்குதலில் 5 மாலுமிகள் உயிரிழந்தனர். இதை இந்தியா கடுமையாக கண்டித்திருக்கிறது. இந்நிலையில்தான் உயிரிழந்த மாலுமிகளில் ஒருவர் கேரளாவை சேர்ந்த அகில் ஜோயன் (26) என்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அகிலுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு மாதங்களில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. குடும்பத்தின் ஒரே மகன் இவர். 19 வயதில் கப்பலில் பணிபுரிய தொடங்கியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு வேலையை மாற்ற முடிவெடுத்திருந்த சமயத்தில்தான் ந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.