1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rs.100 one day pass in metro train

ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்

metro
சென்னை உள்பட பெருநகரங்களில் 50 ரூபாய் கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதி ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இருந்தது. இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் ரூபாய் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதியை பயணிகளுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மெட்ரோ ரயில் நிலையத்தில் 100 ரூபாய் பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம் என்றும் கடைசி பயணத்தை முடிக்கும் போது ரயில் நிலைய கவுன்டரில் பயண அட்டையை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
பயண அட்டையை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு 50 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலுத்தி மாதாந்திர விருப்பம் போல் பயணம் செய்யலாம் என்ற கட்டணம் என்ற வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது !காவல்துறை தகவல்