1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (13:12 IST)

தனுஷ்கோடி கடலில் காற்றாலை திட்டம் அமைக்க ரூ.300 கோடி: மத்திய அரசு

dhanushkodi
தனுஷ்கோடி கடலில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் காற்றாலை திட்டம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்காக கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது ராட்சச கோபுரம் அமைத்து காற்றின் வேகம் கணக்கிடப்பட்டதாகவும் இதனை அடுத்து தற்போது காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஐந்து இடங்களில் சுமார் 500 அடி உயரத்தில் 300 கோடி நிதியில் காற்றாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கிடைக்கும் மின்சார உற்பத்தியை போது அடுத்தடுத்து காற்றாலைகள் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran