வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:52 IST)

இந்து மத பிரச்சனையால் இன்னும் ஒரு 100 கோடி: பொன்னியின் செல்வன் குறித்து பார்த்திபன்!

Parthiban
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்கனவே 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்ட நிலையில் இந்து மத பிரச்சனை தீவிரமடைந்தால் இன்னும் 100 கோடி வசூல் செய்யும் என பார்த்திபன் கிண்டலுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ரூ.500 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் நடித்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என பதிவிட்டுள்ளார். 
 
Edited by Mahendran