திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (13:42 IST)

புருசனை விட மந்திரவாதியதான் பிடிக்கும்..! ஸ்கெட்ச் போட்ட லைலா! – கேரளா சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி!

Kerala Couples
கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த தம்பதிகள் கைதான நிலையில் அந்த மனைவி தனது கணவனையே கொல்ல திட்டமிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம், செல்வம் குவிய வேண்டுமென கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.


நரபலி தவிர்த்து பகவந்த், லைலா மற்றும் மந்திரவாதி ஷபி ஆகிய மூவரும் சேர்ந்து நிர்வாணமாக பூஜைகளும் செய்துள்ளனர். அப்படி பூஜை செய்யும்போது பகவல் சிங் கண் முன்னாலேயே லைலாவும், மந்திரவாதி ஷபியும் ஒன்றாக கூடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் லைலாவுக்கு பகவந்த்தை விட மந்திரவாதி ஷபியை பிடித்து போய் விட்டது.

இதனால் இருவரும் சேர்ந்து பகவந்த்தை கொன்று விட்டு தாங்கள் இன்பமாக இருக்கலாம் என திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள் போலீஸ் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K