1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rp udhayakumar comment about joseph vijay

விஜயை வைத்து படமெடுத்தா அரசு வேலையா?!.. கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்...

rp udhyakumar
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததாலே என்னவோ முதலமைச்சர் விஜயை இருக்கும் பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் சிலருக்கு அரசில் சில பொறுப்புகளையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே அவரின் ஆஸ்தான ஜோதிடருக்கு அவர் அரசு பதவி கொடுக்க அதற்கு கடுமையான எதிர்ப்பு வரவே அதிலிருந்து பின் வாங்கினார். அதேநேரம் பல வருடமாய் விஜயுடன் இருந்த அவரின் உதவியாளர் ஜெகதீசுக்கு அரசு பதவி கொடுத்தார். அதேபோல் லயோலோ மணி மற்றும் பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் ஆகியோருக்கும் பதவி தரப்பட்டது.

மேலும், கோவில்களில் அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உறுப்பினராக விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ‘முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால்தான் அரசு பதிவு கிடைக்கும் என்றால் அது ஜனநாயகமா?.. விஜய் படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அரசு பொறுப்பு கொடுக்கப்படுகிறது.. உணர்வுள்ள தமிழ் சமூகம் விழித்து எழும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என கருத்து தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மண்ணில் புதைச்சி வைச்ச ரூ.5 லட்சம்!.. கரையான் அரிச்சி வீணாப்போச்சே!...