1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin not talked today in assembly

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

udhyanidhi stalin
தமிழகத்தில் 2021-ல் ஆட்சியை பிடித்த திமுக 2026 தேர்தலில் தோல்வியை சந்தித்து சட்டசபையில் எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. கட்சி துவங்கி 2 வருடங்களில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார்.

தவெக ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டசபையில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோற்றுப்போனதால் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். துவக்கம் முதலே சட்டசபையில் தவெகவை கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் அவர் பேசி வருகிறார்.

அதற்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமர், செங்கோட்டையன் போன்றவர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் சட்டசபையில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘திமுக உறுப்பினர்கள் என்னைப்பர்த்து லாட்டரி.. லாட்டரி என கத்துகிறார்கள். லாட்டரி மார்டீனிடம் ஏன் திமுக 900 கோடி நிதி வாங்கியது என சொல்லுங்கள்’ என கேட்டார். இதை எதிர்பார்க்காத உதயநிதி ‘கொடுத்தது அமைச்சரின் மாமா.. அவரிடமே போய் கேளுங்கள்’ என கூறினார்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா ‘வாங்கியது உங்கள் அப்பா. இங்கே அப்பாவை காணவில்லை. வீட்டுக்கு போய் அப்பாவிடம் கேட்டுவிட்டு சொல்லுங்கள்’ என கூறினார். இந்நிலையில்தான், இன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தையும் பேசாமல் இன்றைய நாளை நிறைவு செய்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்