தொடர்புடைய செய்திகள்
- ரவுடிகள் ஆப்பரேஷன் - எஸ்கேப் ஆன பினுவை பிடிக்க தனிப்படை
- ரவுடிகள் கைது சரி ; ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்களை தப்ப விட்டது ஏன்?
- ரவுடிகளை கூண்டோடு அள்ளிய போலீசார் : முக்கிய குற்றவாளி என்ன ஆனார்?
- காதல் ஜோடியினருக்கு திருமணமான 30 நிமிடத்தில் நேர்ந்த அவலம்
- 10 ஆயிரம் தமிழக போலீசாரிடம் லைசன்ஸ் கிடையாது? - அதிர்ச்சி செய்தி
பிறந்த நாள் விழாவில் கொலை திட்டம் தீட்டிய ரவுடி பினு - அதிர்ச்சி செய்தி
தன்னுடைய பிறந்த நாள் விழாவில் தன்னுடைய இரு எதிரிகளை வரவழைத்து அவர்களை தீர்த்துக்கட்ட பிரபல ரவுடி பினு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால், பினு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது 3 கொலை மற்றும் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், தன்னுடைய எதிரிகள் இருவரை தனது பிறந்த நாள் விழாவிற்கு வரவழைத்து, அவர்களை கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு, உடல்நலக் கோளாறு காரணமாக தனது சொந்த ஊரான கேராளவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில்தான் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சூளைமேடு பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை உள்ளை சம்பவங்களை நிகழ்த்தி வந்தார். இதனால் அவரின் வளர்ச்சி அதிகரித்தது. இதனால் பினுவுக்கு மவுசு குறைந்தது.
எனவே, மீண்டும் தனது தொழில் இறங்கி முதலிடத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டிருந்த பினு, அதற்கு இடையூறாக இருக்கும் ராதாகிருஷ்ணன் மற்றும் மற்றொரு ரவுடியை இந்த பிறந்த நாள் விழாவிற்கு வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், இதை முன்பே அறிந்த அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பிவிட்டனர் என கைதான ரவுடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
