1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (13:35 IST)

காதல் ஜோடியினருக்கு திருமணமான 30 நிமிடத்தில் நேர்ந்த அவலம்

பாபநாசத்தில் திருமணமான 30 நிமிடத்தில் காதல் ஜோடியினருக்கு ஏற்பட்ட துயர சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் கலப்புத் திருமணங்களும் அதனால் ஏற்படும் கலவரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர், இளவரசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் காதலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்திருக்கிறது.
 
இந்நிலையில் பாபநாசத்தை சேர்ந்த அபிநயா(22) என்ற பெண்ணும், ராஜேஷ்(22) என்பரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விஷயம் அபிநயாவின் வீட்டிற்கு தெரியவே, அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அபிநயா இதனை பொருட்படுத்தாமல், ராஜேஷுடன் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
 
அவர்கள் திருமணம் செய்து கொண்ட விஷயம் அபிநயாயின் வீட்டாருக்கு தெரியவே, அடுத்த 30 ஆவது நிமிடத்தில் அபிநயாவின் உறவினர்கள், திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று, திருமண கோலத்தில் இருந்த அபிநயா ராஜேஷை சரமாரியாக தாக்கினர். அபிநயாவின் உறவினர்கள் ராஜேஷின் துணியைக் கிழித்தும், அவரின் ஜாதி பெயரை இழிவு படுத்தி சொல்லியும் தாக்கினர்.
 
இதனையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். நடந்ததை காவல் நிலையத்தில் புகாராக எழுதி மனு அளித்தனர். புகாரின் பேரில் அபிநயாவின் உறவினர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.