கன்னத்தில் அறைந்த ஆசிரியை!.. நொடிகளில் சரிந்த பிஞ்சு உயிர்.. எல்.கே.ஜி சிறுவன் மரணம்...
ஆந்திராவில் ஆசிரியை கன்னத்தில் அறைந்த சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து எல்கேஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் லிட்டில் கார்டன் என்கிற மழைலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 6 வயது சிறுவன் பிரணய் தேஜ் எல்.கே.ஜி படித்து வந்தான். சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அவனின் கன்னத்தில் மெதுவாக அடித்தார். அப்போது சிறுவன் கீழே மயங்கி விழுந்தான். முதல் உதவி செய்யப்பட்டு சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்..
இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. சிலர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சொன்னாலும் ஆசிரியை கன்னத்தில் அடித்ததால் சிறுவன் மரணம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை.. சிறுவனுக்கு உடலில் வேறு ஏதாவது பிரச்சனை இருந்திருக்க வேண்டும் என பலரும் சொல்கிறார்கள்.
வகுப்பறையில் ஆசிரியை அந்த சிறுவனை அடிக்கும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. ஆசிசியை கன்னத்தில் அடிப்பதற்கு முன் சிறுவன் மிகவும் பயந்து அழுது கொண்டே இருக்கிறான்.. எனவே, பயத்தால் சிறுவனுக்கு மாரடைப்பு வந்ததா என்பதெல்லாம் பிரேதபரிசோதனை செய்தால் மட்டுமே தெரியவரும்.