1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RK Suresh presence for Arudhra case

ஆருத்ரா மோசடி வழக்கு: நேரில் ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்..!

ஆருத்ரா
ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் ஆர்கே சுரேஷ், விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் தாட்டப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஆர் கே சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டதை அடுத்து அவர் சமீபத்தில் சென்னை திரும்பினார். 
 
அவரை விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது நீதிமன்ற உத்தரவுபடி ஆஜர் ஆவதற்காகவே சென்னை வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? தினகரன்