வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (10:11 IST)

ஒன்றரை ஆண்டுகளாக இயங்கிய போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி..!

குஜராத் மாநிலத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போலி டோல்கேட் இயங்கி வந்ததாகவும் அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் போலீஸ் சுங்கச்சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் அதற்கு தனி சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பாதை வழியாக செல்லும் வாகனங்களில் இடமிருந்து சுங்கச்சாவடி வசூல் செய்யப்பட்டதாகவும் இது குறித்து சந்தேகம் இல்லாததால் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையிலிருந்து வாகனங்களை திருப்பி விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர் இது குறித்து ஆய்வு செய்த போது  போலி    டோல்கேட்   இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து  போலி  டோல்கேட்   நிறுவன உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran