1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RK Suresh return to Chennai from Dubai

சென்னை வந்தார் ஆர்.கே.சுரேஷ்.. ஆருத்ரா மோசடி வழக்கில் ஆஜராக இருப்பதாக தகவல்..!

rk suresh
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் துபாயில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் அவர் ஆருத்ரா மோசடி வழக்கில் காவல்துறை முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் தான் சென்னை ர இருப்பதாகவும் தன் மீதான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து அவரது லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் 11-ம் தேதி அவர் காவல் நிலையம் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் ஆஜர் ஆவதற்காக சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
முதல்வர் அறிவித்த புயல் நிவாரண நிதி மத்திய அரசு வழங்கியது: அண்ணாமலை