தொடர்புடைய செய்திகள்
- சனாதன வெறுப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
- நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்!
- பைஜூஸ் நிறுவனத்திற்கு ரூ.9000 கோடி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை
- அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: என்ன காரணம்?
- பணமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவருக்கு நோட்டீஸ்
ஆர்.கே. சுரேஷ்க்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு.. நீதிமன்றம் உத்தரவு..!
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நோட்டீஸ் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆர்கே சுரேஷ் தற்போது தனது மனைவியுடன் துபாயில் இருப்பதால் அவர் மீண்டும் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 10ஆம் தேதி துபாயில் இருந்து அவர் சென்னை வர உள்ளதால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிசம்பர் 12ஆம் தேதி போலீசார் முன் ஆர் கே சுரேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.\
மேலும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
